பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா அறிவித்துள்ள கனவு அணியில் 7 இந்திய வீரர்கள்


பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா அறிவித்துள்ள கனவு அணியில் 7 இந்திய வீரர்கள்
x
தினத்தந்தி 16 May 2020 10:54 PM GMT (Updated: 16 May 2020 10:54 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா அறிவித்துள்ள கனவு அணியில் 7 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டி நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வருகிற 28-ந்தேதி ஆலோசிக்க உள்ளனர். அப்போது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டபடி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது தெரிய வரும்.

* இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, வங்காளதேச வீரர் தமிம் இக்பாலுடன் முகநூல் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் உணர்ச்சிமிகுந்த தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். நாம் தவறு செய்யும் போது எல்லா முனைகளிலும் இருந்து கடுமையாக விமர்சிப்பார்கள். வங்காளதேச ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிவேன். உலகில் எங்கு சென்று விளையாடினாலும் இந்தியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும். ஆனால் நம்ப முடியாத ஒரு விஷயமாக, வங்காளதேசத்துக்கு சென்று விளையாடும் போது மட்டும் அங்கு இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை’ என்றார்.

* இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளில் இருந்து சிறந்த ஒரு நாள் போட்டி லெவன் அணியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா அறிவித்துள்ளார். அவரது கனவு அணியில் ஷேவாக், கவாஸ்கர், தெண்டுல்கர், விராட் கோலி, டிராவிட், டோனி, கும்பிளே என 7 இந்திய வீரர்களும், இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் ஆகிய பாகிஸ்தான் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

* கொரோனா பாதிப்புக்கு நல நிதி திரட்டுவதற்காக வங்காளதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் டெஸ்டில் இரட்டை சதம் அடிக்க தான் பயன்படுத்திய பேட்டை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட்டார். இந்த பேட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தனது அறக்கட்டளை மூலம் ரூ.15 லட்சத்துக்கு வாங்கி உள்ளார்.


Next Story