கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் முர்டாக் ஓய்வு + "||" + Stephen Murdoch, New Zealand Cricketer, Announces Retirement from Domestic Cricket

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் முர்டாக் ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் முர்டாக் ஓய்வு
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் முர்டாக் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்து,

12 வருடம் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் முர்டாக்  உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெல்லிங்டனில் பிறந்த 36 வயது முர்டாக், 87 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களிலும் 71 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 9,000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து, 18 சதங்களும் அடித்துள்ளார்.

2014-15 சீஸனில் 998 முதல்தர ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். முதல் தர கிரிக்கெட்டில் 46 சராசரி ரன்களும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 40 சராசரி ரன்களும் வைத்துள்ளார். 2018-19 சீஸனில் சிறப்பாக விளையாடியதற்காக சிறந்த பேட்ஸ்மேனுக்காக விருதையும் பெற்றார்.