டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் - இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை + "||" + I’m confident Indian team will do well at Tokyo Olympics, says striker Vandana Katariya
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் - இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் என்று இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஆக்கி இந்தியா சார்பில் அர்ஜுனா விருதுக்கு இந்திய வீராங்கனைகளான வந்தனா, மோனிகா ஆகியோருடன் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து வந்தனா கூறுகையில், “ எனக்கு இது மிகப்பெரும் மகிழ்ச்சி. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கும். எனது சிறப்பான செயல்பாட்டிற்கு, சக வீராங்கனைகளின் ஒத்துழைப்பு முக்கிய காரணம். இதற்காக அவர்களுக்கு நன்றி. தற்போது இந்திய பெண்கள் அணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய தொடர்களில் சாதிப்போம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.