கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம் + "||" + The dismissal of the Australian cricket batting coach

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.
பெர்த், 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது நிதி பிரச்சினையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான 54 வயது கிரேமி ஹிக் 2016-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். அவரது நீக்கம் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.