கிரிக்கெட்

வலை பயிற்சியை கண்டு மிரண்ட கவாஸ்கர் ரகசியத்தை உடைத்த கிரண் மோரே + "||" + Miracle Gavaskar on web training

வலை பயிற்சியை கண்டு மிரண்ட கவாஸ்கர் ரகசியத்தை உடைத்த கிரண் மோரே

வலை பயிற்சியை கண்டு மிரண்ட கவாஸ்கர் ரகசியத்தை உடைத்த கிரண் மோரே
முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலை பயிற்சி என்றாலே அலர்ஜி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார்,
புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரரான இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலை பயிற்சி என்றாலே அலர்ஜி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார், அவருடன் இணைந்து விளையாடிய கிரண் மோரே. முன்னாள் விக்கெட் கீப்பரான கிரண் மோரே அளித்த ஒரு பேட்டியில், ‘வலை பயிற்சியில் நான் பார்த்தமட்டில் மோசமான ஆட்டக்காரர்களில் ஒருவர் கவாஸ்கர். அவருக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு போதும் பிடிக்காது. ஏனோ, அதில் அவர் எப்போதும் தடுமாறுவார். நீங்கள் அவரை வலை பயிற்சியில் பார்த்து விட்டு, மறுநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வதை பார்த்தால் நிச்சயம் 99.9 சதவீதம் வித்தியாசம் இருக்கும். வலை பயிற்சியில் அவரை பார்க்கும் போது, இவர் எல்லாம் எப்படி ரன் குவிக்கப்போகிறார் என்று சொல்வீர்கள். மறுநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் களத்தில் அவரை பார்க்கும் போது, ‘வாவ்’ பிரமாதமாக ஆடுகிறார் என்று ஆச்சரியப்பட்டு பாராட்டுவீர்கள். ஆட்டத்தின் மீது அவர் கவனம் செலுத்தும் விதம் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்’ என்றார்.