கிரிக்கெட்

கார் மோதி முதியவர் பலி: இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது + "||" + Sri Lanka wicketkeeper-batsman Kusal Mendis arrested for causing fatal motor accident

கார் மோதி முதியவர் பலி: இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது

கார் மோதி முதியவர் பலி: இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது
இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் குசல் மென்டிஸ்.
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் குசல் மென்டிஸ். அந்த அணிக்காக 44 டெஸ்டில் விளையாடி 7 சதம் உள்பட 2,995 ரன்களும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 சதம், 17 அரைசதங்களுடன் 2,167 ரன்களும் சேர்த்துள்ளார். இது தவிர 26 இருபது ஓவர் ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறார்.25 வயதான குசல் மென்டிஸ் நேற்று அதிகாலை சொகுசு காரில் கொழும்பு புறநகரான பனதுரா பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அவரது கார் அந்த வழியே சைக்கிளில் வந்த 64 வயது முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து கிரிக்கெட் வீரர் குசல் மென்டிசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த போது மென்டிஸ் அல்லது மரணம் அடைந்த முதியவர் இருவரில் யாரேனும் மது அருந்தி இருந்தார்களா என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அடுத்த 48 மணி நேரத்திற்குள் மென்டிஸ் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார்.