கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சிறந்த வீரராக டி காக் தேர்வு + "||" + Quinton de Kock Named Named South Africa Men's Cricketer Of The Year

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சிறந்த வீரராக டி காக் தேர்வு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சிறந்த வீரராக டி காக் தேர்வு
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சிறந்த வீரராக டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. இந்த ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரட்டை விருதுகளை ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் குயின்டான் டி காக் தட்டிச் சென்றார். டி காக் ஏற்கனவே 2017-ம் ஆண்டிலும் சிறந்த வீரர் விருதை பெற்றிருந்தார்.


ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரராக வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தேர்வானார். தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்டில் ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருது 21 வயதான லாரா வால்வார்ட்டுக்கு கிடைத்தது. ரசிகர்களின் அபிமானமிக்க வீரர் விருதை ‘அதிரடி புயல்’ டேவிட் மில்லர் பெற்றார்.