கிரிக்கெட்

பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு + "||" + Big Bash Cricket Schedule Announcement

பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு
பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் 10-வது பிக்பாஷ் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 3-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 61 ஆட்டங்கள் நடக்கிறது.

அடிலெய்டில் டிசம்பர் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டி அரங்கேறுகிறது. இந்த 5 நாட்களும் பிக்பாஷ் போட்டிக்கு ஓய்வு நாளாகும்.

பெண்களுக்கான பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.