‘ஆர்ச்சரின் செயலால் பெருந்தொகை இழப்பு ஏற்பட்டிருக்கும்’ - இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் கருத்து


‘ஆர்ச்சரின் செயலால் பெருந்தொகை இழப்பு ஏற்பட்டிருக்கும்’ - இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் கருத்து
x
தினத்தந்தி 17 July 2020 10:51 PM GMT (Updated: 17 July 2020 10:51 PM GMT)

ஆர்ச்சரின் செயலால் பெருந்தொகை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன், 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரையொட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி தனது வீட்டிக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவரை 2-வது டெஸ்டில் இருந்து நீக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் கூறுகையில், ‘ஆர்ச்சரின் நடத்தை இந்த ஆண்டுக்கான இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உள்ளூர் கிரிக்கெட் திட்டங்களை (அடுத்து 3 அணிகள் இங்கிலாந்து வந்து விளையாட உள்ளன) பாழ்படுத்தி இருக்கும். சிறிய செயல் என்றாலும் அதன் மூலம் எங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆர்ச்சர் திறமையான இளம் வீரர். இளைஞர்கள் தவறு செய்வது இயல்பு. இந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இருப்பினும் அவர் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்’ என்றார்.

Next Story