கிரிக்கெட்

ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது; அக்தர் விமர்சனம் + "||" + Shoaib Akhtar blames BCCI for T20 World Cup postponement to fit in IPL

ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது; அக்தர் விமர்சனம்

ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது;  அக்தர் விமர்சனம்
ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்தர் விமர்சனம் செய்துள்ளார்.
இஸ்லமாபாத்,

வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி ஒத்திவைத்துள்ளது.

உலக கோப்பை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டியை செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ஐபிஎல் போட்டிக்காக உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ளார். இது குறித்து அக்தர் கூறுகையில் “டி20 உலகக் கோப்பை நடத்தப்பட வாய்ப்பிருந்தது. ஆனால், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல்-க்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது. உலகக் கோப்பைக்கு என்னவானால் என்ன?” என்று விமர்சித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விமர்சனம்
கேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் ஜடேஜாவை 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும்: பிசிசிஐ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
3. பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு...!
பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது அப்போது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்தும் , இரு புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்தும் முக்கிய முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
4. ரோகித் சர்மா உடல் தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை
5. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.