கிரிக்கெட்

புதிய தலைவர் தேர்வு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை + "||" + ICC announces new chairman Consult today

புதிய தலைவர் தேர்வு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை

புதிய தலைவர் தேர்வு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை
புதிய தலைவர் தேர்வு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் கடந்த மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து விலகினார். இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா (சிங்கப்பூர்) நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஐ.சி.சி.யின் போர்டு நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் ஐ.சி.சி.யின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் நடைமுறைகளை தொடங்குவது குறித்து முடிவு செய்ய உள்ளனர். வேட்பு மனு தாக்கல், தலைவர் தேர்தல் உள்ளிட்ட பணிகள் 4 வாரத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி.யின் புதிய தலைவர் பதவிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் காலின் கிரேவ்ஸ், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் டேவ் கேமரூன், இடைக்கால தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஆனால் அவரை தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்து கிரிக்கெட் வாரியம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. தலைவர் பதவியை பிடிக்க 17 உறுப்பினர்களை கொண்ட ஐ.சி.சி.யில் 3-ல் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.