கிரிக்கெட்

இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்டில் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு + "||" + England vs Pakistan 2nd Test, Day 4 Highlights: Rain has the say again

இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்டில் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்டில் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்டில் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
சவுதம்டன்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 223 ரன் எடுத்திருந்தது.


முதல் மூன்று நாட்களிலும் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 72 ரன்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சி இருப்பதால் இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடிவது உறுதியாகி விட்டது.