கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலிசுக்கு ஐசிசி கவுரவம் + "||" + ICC Hall of Fame 2020: Jacques Kallis, Lisa Sthalekar and Zaheer Abbas inducted

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலிசுக்கு ஐசிசி கவுரவம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்  அணியின் முன்னாள்   வீரர் காலிசுக்கு ஐசிசி கவுரவம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிசுக்கு ஐசிசி கவுரவம் வழங்கியுள்ளது.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவித்துள்ளது.

அந்த பட்டியலில் புதிதாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ். 

ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா தாலேகர் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.