கிரிக்கெட்

அதிரடியான சிக்சரில் தனது கார் கண்ணாடியை நொறுக்கிய அயர்லாந்து வீரர் + "||" + The Irishman smashed his car window in a stunning six

அதிரடியான சிக்சரில் தனது கார் கண்ணாடியை நொறுக்கிய அயர்லாந்து வீரர்

அதிரடியான சிக்சரில் தனது கார் கண்ணாடியை நொறுக்கிய அயர்லாந்து வீரர்
அதிரடி பேட்ஸ்மேனான கெவின் ஓ பிரையன் அடித்த சிக்ஸரில் அவரது கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
டப்ளின்,

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் ஓ பிரையன் உள்ளூரில் நேற்று முன்தினம் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த போட்டியின் போது கெவின் ஓ பிரையன் அதிரடியாக விளாசிய ஒரு சிக்சரில் பந்து மைதானத்துக்கு வெளியே போய் விழுந்தது.


அந்த பந்து மைதானத்தில் வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கெவின் ஓ பிரையனின் காரின் பின் பக்க கண்ணாடியை பதம் பார்த்தது. இதில் கார் கண்ணாடி முழுமையாக உடைந்து நொறுங்கியது. போட்டி முடிந்து தனது காரை எடுத்த போது நிலைமையை அறிந்த கெவின் ஓ பிரையன் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமால் கண்ணாடி உடைந்த தன்னுடைய காரில் அமர்ந்தபடி உற்சாகமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அயர்லாந்து கிரிக்கெட் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.