கிரிக்கெட்

20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடம் + "||" + England's David Malan tops batsman rankings in T20

20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடம்

20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடம்
20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடம் பிடித்துள்ளார்.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் 33 வயதான டேவிட் மலான் 4 இடங்கள் முன்னேறி மொத்தம் 877 புள்ளிகளுடன் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அரைசதம் உள்பட 129 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த உயர்வு கிடைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (869 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 4-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.