கிரிக்கெட்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து + "||" + England beat Australia by 24 runs to win second ODI – as it happened

2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
மான்செஸ்டர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான  20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. தொடரை கைப்பற்று முனைப்பில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் , தொடரை தக்க வைக்கும் நோக்கில் இங்கிலாந்து அணியும் மோதின. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது. 48.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த  ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, ஒருநாள் தொடரை1-1 என சமன் செய்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
2. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
3. இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி
இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா?
பகல்-இரவு டெஸ்டில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிரட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 9,834 பேருக்கு தொற்று உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.