சிக்சரில் கெய்ல்... அணித் தாவலில் ஆரோன் பிஞ்ச்...!


சிக்சரில் கெய்ல்... அணித் தாவலில் ஆரோன் பிஞ்ச்...!
x
தினத்தந்தி 18 Sep 2020 10:30 PM GMT (Updated: 18 Sep 2020 8:29 PM GMT)

சிக்சரில் கெய்ல்... அணித் தாவலில் ஆரோன் பிஞ்ச்...!

ஐ.பி.எல். போட்டியில் இதுவரை நடந்துள்ள சில சுவாரஸ்யமான சாதனை விவரம் வருமாறு:-

* 2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே பெங்களூரு அணி 2017-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராக 49 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

* தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடும் கிறிஸ் கெய்ல் முன்பு பெங்களூரு அணிக்காக 175 ரன்கள் விளாசியதே (புனே வாரியர்சுக்கு எதிராக) தனிநபர் அதிகபட்சமாகும். இதில் 30 பந்துகளில் 100 ரன்களை கடந்த போது, அதிவேக சதமாகவும் பதிவானது.

* இதுவரை 58 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிக சதங்கள் நொறுக்கியவர்களில் பஞ்சாப் வீரர் கெய்ல் முதலிடத்தில் (6 சதம்) இருக்கிறார். பெங்களூரு கேப்டன் விராட் கோலி 5 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். அதிக அரைசதங்கள் அடித்தவர்களில் ஐதராபாத் கேப்டன் வார்னர் (44 அரைசதம்) முன்னணியில் இருக்கிறார்.

* அதிக சிக்சர் பதம் பார்த்தவர்களில் 40 வயதான கெய்ல் 326 சிக்சருடன் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் 212 சிக்சருடன் 2-வது இடம் வகிக்கிறார்.

* டெல்லி வீரர் ஷிகர் தவான் அதிக பவுண்டரி அடித்த வீரராக (524 பவுண்டரி) வலம் வருகிறார்.

* 2016-ம் ஆண்டில் விராட் கோலி 973 ரன்கள் திரட்டியதே ஐ.பி.எல். சீசன் ஒன்றில் குவிக்கப்பட்ட அதிகட்ச ரன்னாகும்.

* 19 ஹாட்ரிக் விக்கெட் சாதனைகள் பதிவாகியிருக்கிறது. இவற்றில் தற்போது டெல்லிக்காக ஆடும் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்தது சிறப்பம்சமாகும்.

* ரன் விட்டுக்கொடுக்காமல் அதிகமான பந்துகளை வீசியவர் என்ற சிறப்பு சென்னை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வசம் உள்ளது. அவர் 1,249 ‘டாட் பந்து’கள் வீசியுள்ளார்.

* 8 ஐ.பி.எல். அணிகளுக்காக ஆடிய வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் பெறுகிறார். ஏற்கனவே ராஜஸ்தான், டெல்லி, புனே வாரியர்ஸ், ஐதராபாத், மும்பை, குஜராத் லயன்ஸ், பஞ்சாப் அணிகளுக்காக ஆடியுள்ள அவர் இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக களம் இறங்குகிறார்.

Next Story