கிரிக்கெட்

6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் கடினமாக இருந்தது - டோனி ஒப்புதல் + "||" + Isolation for 6 days was very difficult - Tony agreed

6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் கடினமாக இருந்தது - டோனி ஒப்புதல்

6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் கடினமாக இருந்தது - டோனி ஒப்புதல்
6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் கடினமாக இருந்தது - டோனி ஒப்புதல்
ஓராண்டு இடைவெளிக்கு பிறகு நேற்று களம் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தாடியுடன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்துக்கு முன்பாக டோனி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், ‘முதல் 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த 5 மாதங்களாக குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்ட நிலையில் உடனடியாக தனியாக ஒரு அறையில் தங்க வேண்டும் என்பது எளிதான விஷயமல்ல. தனிமைப்படுத்துதல் நேரத்தை எல்லோரும் பயனுள்ள வகையில் பயன்படுத்தினார்கள். யாரும் ஏமாற்றமோ அல்லது வருத்தமோ அடையவில்லை. தனிமைப்படுத்துதல் முடிந்து வெளியில் வருகையில் நன்றாக இருந்தது. பயிற்சி வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. ஊரடங்கின் போது உடல் தகுதியை மேம்படுத்த நல்ல நேரம் கிடைத்தது. அந்த நேரத்தை அணி வீரர்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்தியது பாராட்டுக்குரியதாகும்’ என்றார்.