கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் விலகல் ஜாசன் ஹோல்டர் சேர்ப்பு + "||" + IPL Mitchell Marsh withdraws from Hyderabad

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் விலகல் ஜாசன் ஹோல்டர் சேர்ப்பு

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் விலகல் ஜாசன் ஹோல்டர் சேர்ப்பு
ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் விலகல் ஜாசன் ஹோல்டர் சேர்ப்பு
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் 5-வது ஓவரை வீசிய ஐதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயலுகையில் வலது கணுக்காலில் காயம் அடைந்தார். 4 பந்து மட்டுமே வீசிய அவர் தொடர்ந்து பந்து வீச முடியாமல் வெளியேறினார். பிறகு வலியை பொறுத்துக்கொண்டு பேட்டிங் செய்த மார்ஷ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் மிட்செல் மார்ஷ் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஐதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.