கிரிக்கெட்

ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா? சென்னை அணி சிஇஒ விளக்கம் + "||" + We are not thinking about Raina as we respect his space: CSK CEO

ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா? சென்னை அணி சிஇஒ விளக்கம்

ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா?  சென்னை அணி சிஇஒ விளக்கம்
ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
துபாய்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. ஆனால், அடுத்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

இதனால், ஏமாற்றம் அடைந்த சென்னை அணி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில், சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “ ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா தானாகவே விலகியுள்ளார். எனவே, அவரது தனிப்பட்ட முடிவுகளுக்கு  மதிப்பளிக்க வேண்டும்.  எனவே,  அது (ரெய்னாவை மீண்டும் இடம் பெறச்செய்வது) குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களுரூ அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை
பெங்களுரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 159 ரன்கள் குவித்துள்ளது.
2. ஐபிஎல் கிரிக்கெட் 2021: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. ஐபிஎல் 2021- பெங்களுரூ அணி வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி துவங்க உள்ளது.
4. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டு பிளசிஸ் அறிவிப்பு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் அறிவித்துள்ளார்.
5. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.