கிரிக்கெட்

ஒரு பந்தை தவற விட்டதற்கு நன்றி: ராஜஸ்தான் வீரர் திவாட்டியவை பாராட்டிய யுவராஜ் + "||" + Thanks For Missing One Ball": Yuvraj Singh's Comical Reaction To Rahul Tewatia's 5 Sixes In An Over

ஒரு பந்தை தவற விட்டதற்கு நன்றி: ராஜஸ்தான் வீரர் திவாட்டியவை பாராட்டிய யுவராஜ்

ஒரு பந்தை தவற விட்டதற்கு நன்றி:  ராஜஸ்தான் வீரர் திவாட்டியவை பாராட்டிய யுவராஜ்
ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் திவாட்டியா, காட்ரெல் வீசிய 18-வது ஓவரில், 5 சிக்சர் விளாசி பிரம்மிக்க வைத்தார்.
மொஹாலி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்தப்போட்டியில் 224-ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை  எட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிரட்டியது.  குறிப்பாக ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் திவாட்டியா, காட்ரெல் வீசிய 18-வது ஓவரில், 5 சிக்சர் விளாசி பிரம்மிக்க வைத்தார். அவரின் இந்த அதிரடிதான், ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

இதானால், ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாட்டியாவை  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முன்னாள் வீரர்களும் ராகுல் திவாட்டி பேட்டிங்கை புகழந்துள்ளனர். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் ராகுல் திவாட்டியாவை பாராட்டியுள்ளார். 

யுவராஜ் சிங் கூறுகையில், ஒரு பந்தை சிக்சருக்கு பறக்க விடாமல் விட்ட ராகுல் திவாட்டியாவுக்கு நன்றி. சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள்” எனத்தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2007 உலகக்கோப்பை டி20 போட்டியில், ஸ்டூவர்டு பிராட் வீசிய ஒரே ஓவரில், யுவராஜ்சிங் 6 சிக்சர்களை பறக்க விட்டு சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் டோனியின் புதிய தோற்றம்
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2. தோல்விக்கு காரணம் என்ன? விராட் கோலி விளக்கம்
டிவில்லியர்சிடம் இருந்து எப்போதும் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம் என்று விராட் கோலி கூறினார்.
3. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா? சிஎஸ்கே சிஇஓ பேட்டி
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.