கிரிக்கெட்

அரசு வேலையில் இருப்பதை போல சிஎஸ்கே வீரர்கள் சிலர் எண்ணுகின்றனர் - சேவாக் பாய்ச்சல் + "||" + IPL 2020: Virender Sehwag Says Some Batsmen In Team "Think Of CSK As A Government Job"

அரசு வேலையில் இருப்பதை போல சிஎஸ்கே வீரர்கள் சிலர் எண்ணுகின்றனர் - சேவாக் பாய்ச்சல்

அரசு வேலையில் இருப்பதை போல சிஎஸ்கே வீரர்கள் சிலர் எண்ணுகின்றனர் - சேவாக் பாய்ச்சல்
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு ஆட்டங்களில் நான்கில் தோல்வி கண்டுள்ள சிஎஸ்கே அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது.
அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் கேதர் ஜாதவ், இக்கட்டான தருணத்தில் மந்தமாக ஆடியது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

இந்த நிலையில்,  இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக் கூறியிருப்பதாவது:- கொல்கத்தா அணிக்கு எதிரான இலக்கை சிஎஸ்கே வீரர்கள் விரட்டியிருக்க வேண்டும். ஆனால் கேதர் ஜாதவும் ஜடேஜாவும் பந்துகளை வீணடித்து ரன்கள் எடுக்காமல் இருந்ததால் தோல்வி ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் விளையாடுவதை அரசாங்க வேலை போல சில வீரர்கள் எண்ணுகிறார்கள். சிறப்பாக விளையாடுகிறோமோ இல்லையோ எப்படியும் தங்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்” இவ்வாறு விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல்: பெங்களூரு- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
இவ்விரு அணிகள் இடையே ஏற்கனவே நடந்த லீக்கில் கொல்கத்தா அணி 82 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.