கிரிக்கெட்

வெற்றிப்பாதைக்கு திரும்புமா ஐதராபாத்? + "||" + Will Hyderabad return to winning ways?

வெற்றிப்பாதைக்கு திரும்புமா ஐதராபாத்?

வெற்றிப்பாதைக்கு திரும்புமா ஐதராபாத்?
8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னை அணிகளிடம் ‘அடி’ வாங்கியது.
8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னை அணிகளிடம் ‘அடி’ வாங்கியது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டங்களும் முக்கியமானது என்பதால் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. கேப்டன் வார்னர் (284 ரன்), பேர்ஸ்டோ (280 ரன்), மனிஷ் பாண்டே (206 ரன்), வில்லியம்சன் (152 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் மலைபோல் நம்பி இருக்கிறது. ஏற்கனவே கொல்கத்தாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்த ஐதராபாத் அதற்கு பழிதீர்க்கவும் முனைப்பு காட்டும்.

இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ள கொல்கத்தா அணி புதிய கேப்டன் இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்கி கடந்த ஆட்டத்தில் மும்பையிடம் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா அணி எழுச்சி பெற ரஸ்செல், மோர்கன், தினேஷ் கார்த்திக், ராணா, திரிபாதி ஆகிய அதிரடி சூரர்கள் ஒருசேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.