ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர் நடந்தது இதுவே முதல் முறையாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஐதராபாத்-கொல்கத்தா, மும்பை-பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய இரு ஆட்டங்களும் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர் நடந்தது இதுவே முதல் முறையாகும். இதையும் சேர்த்து இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டங்கள் சூப்பர் ஓவரில் முடிவு அறியப்பட்டுள்ளன.
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்