அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா?


அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா?
x
தினத்தந்தி 28 Oct 2020 11:00 PM GMT (Updated: 28 Oct 2020 9:32 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

12 ஆட்டங்களில் 4 வெற்றி, 8 தோல்வி என்று கடைசி இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இனி நெருக்கடி ஏதுமில்லை. ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதும், அந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் (65 ரன்) அடித்ததும் இளம் வீரர்களுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது. எஞ்சிய ஆட்டங்களிலும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள். ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பழிதீர்த்து அவர்களின் அடுத்து சுற்று கனவை சிதைக்க தீவிரம் காட்டும்.

12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ள கொல்கத்தா அணி எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அதனால் இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். இதில் தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். சார்ஜாவில் நடந்த கடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பேட்டிங்குக்கு உகந்த சார்ஜாவில் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்ததால் பெரிய ஸ்கோர் குவிக்க முடியாமல் போய் விட்டது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடந்த 6 ஆட்டங்களில் வெறும் 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.

Next Story