கிரிக்கெட்

ஒரு நாள் தொடரில் சாதிக்காவிட்டால் 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்கும் - கிளார்க் கணிப்பு + "||" + India will lose all 4 Tests if they do not win in one day series - Clarke predicts

ஒரு நாள் தொடரில் சாதிக்காவிட்டால் 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்கும் - கிளார்க் கணிப்பு

ஒரு நாள் தொடரில் சாதிக்காவிட்டால் 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்கும் - கிளார்க் கணிப்பு
ஒரு நாள் தொடரில் சாதிக்காவிட்டால் 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்கும் என்று மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.
சிட்னி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியால் தங்கள் அணியை முன்னெடுத்து சென்று ஜொலிக்க முடியும். வெற்றியுடன் அடித்தளம் அமைத்து கொடுத்து விட்டால், அதன் பிறகு முதலாவது டெஸ்டுடன் விராட் கோலி தாயகம் திரும்பும் போது இந்திய அணியால் நன்றாக விளையாட முடியும். ஆனால் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி ஜெயிக்காவிட்டால் டெஸ்ட் போட்டிகளிலும் திணறத் தான் செய்வார்கள். அவ்வாறான நிலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுக்கும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வித்தியாசமான பாணியில் பந்து வீசக்கூடியவர். அவர் ஆக்ரோஷமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஷாட்பிட்ச் பந்துகளில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தை மிரட்டினார். அதே போன்று சுமித்துக்கு எதிராக தொடர்ந்து ஷாட்பிட்ச் பந்துகளை பும்ரா வீச வேண்டும்.

இவ்வாறு கிளார்க் கூறினார்.