கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார் + "||" + Famous cricket Tamil commentator Abdul Jabbar has passed away

பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்

பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்
பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்தார். வானொலியில் அவரது வர்ணனையை கேட்ட பலரும் அவரது குரலுக்கு அடிமையாகினர். அதன்பிறகு ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2007-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஈஎஸ்பின்-ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.