கிரிக்கெட்

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் பயணம்20 ஓவர், ஒருநாள் போட்டி தொடரில் ஆடுகிறது + "||" + England women's cricket team travels to Pakistan for the first time

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் பயணம்20 ஓவர், ஒருநாள் போட்டி தொடரில் ஆடுகிறது

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் பயணம்20 ஓவர், ஒருநாள் போட்டி தொடரில் ஆடுகிறது
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
லண்டன், 

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அக்டோபர் 14-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 18-ந் தேதியும், 2-வது ஆட்டம் 20-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந் தேதியும் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் பயணம் செய்து விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும். இதே நேரத்தில் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் பெண்கள் 20 ஓவர் போட்டி நடைபெறும் அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் அதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி 2005-ம் ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக பாகிஸ்தான் செல்ல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.