கிரிக்கெட்

ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் - இந்திய அணியின் வட்டாரங்கள் + "||" + Ravindra Jadeja takes at least 4 to 6 weeks to recover from injury - Indian team circles

ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் - இந்திய அணியின் வட்டாரங்கள்

ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் - இந்திய அணியின் வட்டாரங்கள்
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்று இந்திய அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* பந்து தாக்கி விரலில் எலும்பு முறிவுக்கு உள்ளான இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும். இதனால் அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் இரு டெஸ்டில் அவரால் விளையாட முடியாது என்று இந்திய அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வீரர்கள் சிராக் சுரி, ஆர்யன் லக்ரா ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றொரு ஐக்கிய அரபு அமீரக வீரர் அலிஷான் ஷரபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அயர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடையே அபுதாபியில் நேற்று நடக்க இருந்த 2-வது ஒரு நாள் போட்டி 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

* சிட்னி டெஸ்டில் 3-வது நாள் ஆட்டத்தில் புஜாராவுக்கு அவுட் கேட்டு அப்பீல் செய்த போது, 3-வது நடுவர் மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், நடுவரின் முடிவை விமர்சித்தார். இது நடத்தை விதியை மீறிய செயல் என்பதால் டிம் பெய்னுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.