கிரிக்கெட்

மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் + "||" + Michael Vaughan ‘getting a lot of tweets from India’ after Ajinkya Rahane’s team breach Gabba fortress

மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாட்டி வதைத்து வருகின்றனர்.

இந்திய அணி டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட் வாஷ் ஆகும் என கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் இந்திய அணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்திய அணி வெற்றி மூலம் பதிலடி கொடுத்து வந்த‌து. 

அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி வாகனை வாயடைக்க செய்துள்ளனர். இதன் எதிரொலியாக மைக்கேல் வாகன், இந்திய அணியை புகழ்ந்து தள்ளினார். இருந்த போதும், இந்திய அணி ரசிகர்கள் பலர் அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். வாகனும் தொடர்ந்து சமாளிக்க முயற்சித்து வருகிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விமர்சனம்
கேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் ஜடேஜாவை 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.