கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Test against Pakistan: South Africa all out for 220

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட் ஆனாது.
கராச்சி,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் கராச்சியில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் இம்ரான் பட், நமன் அலி அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தன. டீன் எல்கர் (58 ரன்), ஜார்ஜ் லின்ட் (35 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 

முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 23 ரன்னிலும், கேப்டன் குயின்டான் டி காக் 15 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். வான்டெர் துஸ்சென் (17 ரன்), பவுமா (17 ரன்) இருவரும் ரன்-அவுட் ஆனது பின்னடைவாக அமைந்தது. முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 69.2 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், நமன் அலி 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தென்ஆப்பிரிக்க பவுலர்கள் திணறடித்தனர். அபித் அலி (4 ரன்), இம்ரான் பட் (9 ரன்), கேப்டன் பாபர் அசாம் (7 ரன்), ஷகீன் ஷா அப்ரிடி (0) வரிசையாக ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 33 ரன்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்தது. ரபடா 2 விக்கெட்டும், நோர்டியா, கேஷவ் மகராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நேற்று ஒரே நாளில் 14 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.