கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டு நடுவர்கள் நியமனம் + "||" + Appointment of domestic umpires for the India-England Test series

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டு நடுவர்கள் நியமனம்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டு நடுவர்கள் நியமனம்
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டு நடுவர்களே பணியாற்ற இருக்கிறார்கள்.
சென்னை,

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முழுக்க முழுக்க உள்நாட்டு நடுவர்களே பணியாற்ற இருக்கிறார்கள். இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் சவுத்ரி, நிதின் மேனன் முதலாவது டெஸ்டுக்கும், வீரேந்தர் ஷர்மா, நிதின் மேனன் 2-வது டெஸ்டுக்கும் கள நடுவர்களாக பணியாற்ற இருக்கிறார்கள். ‘ஐ.சி.சி. எலைட் பேனல்’ என்ற உயரிய நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் நிதின் மேனன் தவிர மற்ற இருவரும் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் நடுவராக செயல்பட்டதில்லை. முதலாவது டெஸ்டில் ஷம்சுதினும், 2-வது டெஸ்டில் அனில் சவுத்ரியும் 3-வது நடுவர் பணியை கவனிப்பார்கள். போட்டி நடுவராக ஜவஹல் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நடுவர்கள் வெளிநாட்டிற்கு பயணிப்பது கடினமாக இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது