கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் கங்குலி நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை + "||" + Sourav Ganguly doing well, shifted to private room: Hospital

பிசிசிஐ தலைவர் கங்குலி நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பிசிசிஐ தலைவர் கங்குலி நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை
பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான 48 வயதான சவுரவ் கங்குலிக்கு அண்மையில் மீண்டும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த 3 அடைப்புகளில் ஒன்று ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள இரு அடைப்புகளை சரி செய்ய ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை நேற்று முன் தினம் அளிக்கப்பட்டு இரண்டு ‘ஸ்டன்ட்’ பொருத்தப்பட்டது. 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கங்குலியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கங்குலி  நலமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பிரைவேட் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்த முடியாமல் போனால் ரூ.2500 கோடி இழப்பீடு: எந்த கிரிக்கெட் வீரரும் கொரோனா தடுப்பு விதியை மீறவில்லை; இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது எந்த வீரரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
2. கங்குலிக்கு 2வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலிக்கு 2வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. கங்குலி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
4. கங்குலி உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம்
பிசிசிஐ தலைவர் கங்குலி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
5. பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.