விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் மீண்டும் நடராஜன்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் மீண்டும் நடராஜன்
x
தினத்தந்தி 4 Feb 2021 12:09 AM GMT (Updated: 4 Feb 2021 12:09 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் டி.நடராஜன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

சென்னை,

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தமிழக அணி மகுடம் சூடியது. அடுத்ததாக விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து நேற்று அறிவித்தனர். முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ஆடாத இந்திய அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த டி.நடராஜன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். தமிழக அணி வருமாறு:-

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), பாபா இந்த்ரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், என்.ஜெகதீசன், சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, ஜெ.கவுசிக், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், எம்.சித்தார்த், சோனு யாதவ், கே.விக்னேஷ், டி.நடராஜன், அஸ்வின் கிறிஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், ஜி.பெரியசாமி, எம்.முகமது.

Next Story