கிரிக்கெட்

ரூ.145 கோடிக்கு வீரர்கள் விற்பனை + "||" + Soldiers sold for Rs 145 crore

ரூ.145 கோடிக்கு வீரர்கள் விற்பனை

ரூ.145 கோடிக்கு வீரர்கள் விற்பனை
சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.145 கோடியே 30 லட்சத்துக்கு வீரர்களை வாங்கின.
சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் இடம் பெற்றிருந்த 292 வீரர்களில் இருந்து 57 வீரர்கள் மட்டும் விலை போனார்கள். இதில் 22 வெளிநாட்டவரும் அடங்குவர். இவர்களை 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.145 கோடியே 30 லட்சத்துக்கு வாங்கின.

ஏலம் போகாத வீரர்களில் ஆரோன் பிஞ்ச், லபுஸ்சேன், மேத்யூ வேட் , அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா), ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலஸ் (இங்கிலாந்து), ஹனுமா விஹாரி (இந்தியா), டேரன் பிராவோ, காட்ரெல் (வெஸ்ட் இண்டீஸ்), டிம் சவுதி, காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து), வான்டெர் துஸ்சென் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.