கிரிக்கெட்

இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷனகா நியமனம் + "||" + Shanaka appointed captain of Sri Lanka 20 overs cricket team

இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷனகா நியமனம்

இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷனகா நியமனம்
இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, 

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் ஆட்டங்கள் முறையே மார்ச் 3, 5, 7 ஆகிய தேதிகளில் ஆன்டிகுவாவில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணியின் புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 20 ஓவர் அணியின் கேப்டனாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஒதுங்கி இருப்பதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 29 வயது ஆல்-ரவுண்டரான ஷனகா 6 டெஸ்ட், 22 ஒருநாள் மற்றும் 40 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

இதற்கிடையில் ‘விசா’ பிரச்சினை காரணமாக புதிய கேப்டன் ஷனகா இலங்கை அணியினருடன் இணைந்து வெஸ்ட்இண்டீசுக்கு செல்ல முடியவில்லை. அமெரிக்கா வழியாக செல்வதற்குரிய போக்குவரத்து விசாவுடன் கூடிய ‘பாஸ்போர்ட்டை’ அவர் தொலைத்து விட்டதால் புதிய ‘விசா’வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார். ‘விசா’ கிடைத்ததும் விரைவில் அவர் வெஸ்ட்இண்டீஸ் புறப்பட்டு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் முதல் கட்ட போட்டிகளில் விளையாட முடியாது.