கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி மீண்டும் தோல்வி + "||" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu team loses again

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி மீண்டும் தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி மீண்டும் தோல்வி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
இந்தூர்,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தூர், பெங்களூரு, சென்னை உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-மத்தியபிரதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் ‘பேட்’ செய்த மத்தியபிரதேச அணி 48.2 ஓவர்களில் 225 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழக அணி 49 ஓவர்களில் 211 ரன்னில் அடங்கியது. இதனால் மத்தியபிரதேச அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாருக்கான் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இது மத்தியபிரதேச அணிக்கு முதலாவது வெற்றியாகும்.