கிரிக்கெட்

கோலி,ஜோரூட் கருத்து + "||" + Goalie, Jorut commented

கோலி,ஜோரூட் கருத்து

கோலி,ஜோரூட் கருத்து
பகல்-இரவு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
ஆமதாபாத், 

பகல்-இரவு டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தரத்துக்கும், திறமைக்கு ஏற்ப பேட்டிங் அமையவில்லை. நாங்கள் 100 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்து விட்டு 150 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆகி விட்டோம். முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. 30 விக்கெட்டுகளில் 21 விக்கெட் சுழல் இன்றி நேராக வந்த பந்துகளில் விழுந்தது வழக்கத்துக்கு மாறான ஒரு விஷயமாகும். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே உங்களது தடுப்பாட்டத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். களத்தில் முழு திறமையை வெளிப்படுத்த தவறியதால், போட்டி சீக்கிரமாகவே முடிந்து விட்டது’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் 70 ரன்னுக்கு 2 விக்கெட் என்று ஓரளவு நல்ல நிலையில் இருந்தோம். அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். 250 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். சரிவில் இருந்து மீண்டு அடுத்த டெஸ்டில் வலுவான அணியாக வருவோம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம் கோலி மீண்டும் சரிவு
டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
2. ஐ.சிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல் - விராட் கோலி 4வது இடம், ரஹானே 8-வது இடம்
ஐ.சிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4-வது இடம் பிடித்துள்ளார்.