கிரிக்கெட்

ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை + "||" + MS Dhoni arrives in Chennai ahead of CSK’s IPL 2021 camp

ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை

ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது.

 போட்டிக்கான இடம், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெயக்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்துதலின் போது தங்களது அறையை விட்டு வெளியே வர அனுமதி இ்ல்லை. 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வர வேண்டும். அதன் பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் அணியின் 2 வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த முறை கூடுதல் விழிப்புடன் செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வீரர்களுக்கான பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி தொடங்க இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது போட்டிகள் இன்றி ஆயத்தமாக உள்ள வீரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டமில்லை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னையில் மோதல்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
3. ஐ.பி.எல். பற்றிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார், ஸ்டெயின்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஏலத்துக்கு முன்னதாகவே விலகினார்.