கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசல் லீ முதலிடம் + "||" + Women cricket rankings South African athlete Liselle Lee topped

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசல் லீ முதலிடம்

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசல் லீ முதலிடம்
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங்கில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
துபாய், 

இதில் இந்திய தொடரில் கலக்கிய தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் லிசல் லீ 7 இடங்கள் முன்னேறி மொத்தம் 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இ்ந்திய தொடரில் அவர் 4 ஆட்டங்களில் அடி ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 288 ரன்கள் சேர்த்துள்ளார். தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளில் நம்பர் ஒன் அரியணையை அலங்கரித்த ஒரே வீராங்கனை இவர் தான். ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜூன் மாதமும் முதலிடத்தில் இருந்திருக்கிறார். இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் டாமி பீமாண்ட் (765 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

இதே தொடரில் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 253 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவின் பூனம் ரவுத் 8 இடங்கள் உயர்ந்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஸ்மிர்தி மந்தனா 7-வது இடத்திலும், கேப்டன் மிதாலிராஜ் 9-வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 15-வது இடத்திலும் உள்ளனர். இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி லக்னோவில் இன்று (காலை 9 மணி) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜொலிக்கும் வீராங்கனைகள் தரவரிசையில் மேலும் ஏற்றம் காண்பார்கள்.