ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விமர்சனம்


ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விமர்சனம்
x
தினத்தந்தி 18 April 2021 8:42 PM GMT (Updated: 18 April 2021 8:42 PM GMT)

கேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் ஜடேஜாவை 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளில் முத்திரை பதிக்கும் வீரர்களை 'ஏ' பிளஸ் கிரேடில் சேர்த்து அவர்களுக்கு ஆண்டுக்கு தலா 7 கோடி ரூபாய் பிசிசிஐ வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் கோலி, ரோஹித், பும்ரா மட்டுமே முதல் கிரேடில் இடம்பெற்றனர். ஆனால், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை, இரண்டாவது உள்ள 'ஏ' கிரேடில் தான் பிசிசிஐ தொடர்ந்து வைத்துள்ளது.

கேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் ஜடேஜாவை 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், பிசிசிஐ-யின் இந்த முடிவை சுட்டிக்காட்டிவதில் தனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story