கிரிக்கெட்

‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல் + "||" + ‘It is difficult to bowl 2nd in Mumbai’ - Lokesh Rahul

‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்

‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்
‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்.
மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பஞ்சராக்கியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 195 ரன்கள் குவித்த போதிலும் இந்த இலக்கை டெல்லி 18.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து விட்டது. ஷிகர் தவான் 92 ரன்கள் விளாசினார்.

தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘எனது பிறந்த நாள் பரிசாக வெற்றி கிடைத்திருந்தால் இனிமையாக இருந்திருக்கும். எனவே கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்கத்தில் நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது 10-15 ரன் குறைவாக எடுத்து விட்டதாக தோன்றுகிறது. ஆனாலும் 190 ரன்களை கடந்ததே இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான் என்று நினைத்தேன். ஆனால் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார். மும்பை வான்கடேயில் விளையாடும் போது எப்போதும் 2-வது பந்து வீசுவது சவாலானதாகும். பனியின் தாக்கம் மற்றும் வியர்வையால் பந்து ஈரமாகும் போது, அதை வைத்து பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது. பந்து ஈரமாக இருப்பதால் பந்தை மாற்றிதரும்படி நடுவர்களிடம் சில முறை கேட்டேன். ஆனால் அதற்கு விதிமுறையில் இடம் இல்லை என்று கூறி விட்டனர். வர்ணனையாளர் சைமன் டவுல் கூறிய யோசனைப்படி 2-வது பவுலிங் செய்யும் அணிக்கு ஒவ்வொரு 2 ஓவர்களுக்கு பிறகும் பந்தை மாற்றி தர அனுமதி தந்தால் நன்றாகத் தான் இருக்கும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் மாணவியை சந்தித்து பாராட்டு
பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்ததையடுத்து பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவியை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
2. முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்து பாராட்டு
முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. நெருக்கடியான காலகட்டத்தில் உதவி; சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
இந்தியாவுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் உதவி செய்த சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
4. வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த இளம்பெண்ணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.
5. இந்திய அணிக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.