கிரிக்கெட்

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் + "||" + IPL 2021 Points Table: Orange Cap Holder And Purple Cap Holder List After RCB vs RR Match 16

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
மும்பை,

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4-லும் வெற்றி பெற்றுள்ளது. 

 நடப்பு சீசனில் இதுவரை தோல்வியே இல்லாத அணியாக பெங்களூரு அணி அசத்தி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்னை அணி 2-வது இடத்துக்கு  பின் தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.