கிரிக்கெட்

பெங்களூரு அணியில் நியூசிலாந்து வீரர் குக்கெலின் சேர்ப்பு + "||" + New Zealand's Kukel joins Bangalore squad

பெங்களூரு அணியில் நியூசிலாந்து வீரர் குக்கெலின் சேர்ப்பு

பெங்களூரு அணியில் நியூசிலாந்து வீரர் குக்கெலின் சேர்ப்பு
பெங்களூரு அணியில் நியூசிலாந்து வீரர் குக்கெலின் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆமதாபாத், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் சொந்த காரணங்களுக்காக விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குக்கெலின் பெங்களூரு அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். குக்கெலின் மும்பை அணியின் மாற்று பவுலராக இருந்து வந்தார். இதனால் அவர் ஆமதாபாத்தில் உள்ள பெங்களூரு அணியுடன் உடனடியாக இணைந்து கொண்டார்.

முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகே பாதுகாப்பு வளையத்திற்குள் இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். 29 வயதான குக்கெலின் ஏற்கனவே 2019-ம் ஆண்டில் மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து 2 ஆட்டத்தில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.