கிரிக்கெட்

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு + "||" + New Zealand's Kukel joins Bangalore squad

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயத்தில் பெண்களுக்கான சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட்டையும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவது வழக்கம். இதில் வெலோசிட்டி, சூப்பர்நோவாஸ், டிரையல் பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும். இந்திய மங்கைகளுடன் இணைந்து வெளிநாட்டு வீராங்கனைகளும் கலந்து கொள்வார்கள்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல நாடுகள் இந்தியா செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதனால் பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் போட்டியை நடத்தினாலும் வௌிநாட்டு வீராங்கனைகள் வர முடியாத சூழல் நிலவுகிறது. எனவே 4-வது சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.