கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி சிறப்பான தொடக்கம் + "||" + Last Test against Bangladesh: Sri Lanka off to a great start

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி சிறப்பான தொடக்கம்

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி சிறப்பான தொடக்கம்
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
பல்லகெலே, 

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணாரத்னே, லஹிரு திரிமன்னே ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 209 ரன்னாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணாரத்னே (118 ரன், 190 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்துள்ளது. திரிமன்னே 131 ரன்னுடனும், ஒஷாடா பெர்னாண்டோ 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.