கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7½கோடி நிதியுதவி - தெண்டுல்கரும் நன்கொடை


கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7½கோடி நிதியுதவி - தெண்டுல்கரும் நன்கொடை
x
தினத்தந்தி 30 April 2021 12:13 AM GMT (Updated: 30 April 2021 12:13 AM GMT)

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7½ கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நன்கொடை வழங்கியுள்ளார்.

புதுடெல்லி, 

தற்போது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சைக்கு ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் சிகிச்சைக்கு உதவ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான பிரெட்லீ ஆகியோர் நிதியுதவி அறிவித்தனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவிடும் வகையில் ஐ.பி.எல். அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ரூ.7½ கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ரூ.1½ கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கு ரூ.1 கோடி நன்கொடையாக ‘மிஷன் ஆக்சிஜன்’ திட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

Next Story