கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 374 ரன்கள் சேர்ப்பு + "||" + Test against Zimbabwe: Pakistan add 374 runs

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 374 ரன்கள் சேர்ப்பு

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 374 ரன்கள் சேர்ப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 374 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹராரே,

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 176 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்து இருந்தது. இம்ரான் பட் 43 ரன்னுடனும், அபித் அலி 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய அபித் அலி 60 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட அசார் அலி 36 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும் திரிபானோ பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் 91 ரன்னில் நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான் 45 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து ஹசன் அலி, பவாத் ஆலமுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய பவாத் ஆலம் தனது 4-வது சதத்தை எட்டினார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 120 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்தது. பவாத் ஆலம் 108 ரன்னும், ஹசன் அலி 21 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.