ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்


ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
x
தினத்தந்தி 6 May 2021 1:17 AM GMT (Updated: 2021-05-06T06:47:22+05:30)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த மாதத்துக்கான (ஏப்ரல்) ஐ.சி.சி.சிறந்த வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் அடித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பஹர் ஜமான், 3 நாடுகள் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நேபாள அணிக்காக 4 அரைசதம் உள்பட 278 ரன்கள் குவித்த அந்த அணியின் பேட்ஸ்மேன் குஷால் புர்டெல் ஆகியோரும், சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகள் அலிசா ஹீலி, மெகன் ஸ்சட், நியூசிலாந்து வீராங்கனை லீச் காஸ்பெரெக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து விருதுக்குரிய வீரர், வீராங்கனையை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.


Next Story