கிரிக்கெட்

‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’; ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழாரம் + "||" + Virat Kohli Best Batsman in World: Australian captain Tim Paine

‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’; ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழாரம்

‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’; ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழாரம்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியது. அதன் பிறகு 2020-21-ம் ஆண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணில் புரட்டியெடுத்தது. இவ்விரு தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக டிம் பெய்ன் செயல்பட்டார். அவர் இந்திய கேப்டன் விராட் கோலியை தற்போது வெகுவாக புகழ்ந்துள்ளார்.

36 வயதான டிம் பெய்ன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘விராட் கோலியை பொறுத்தவரை அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். அவரை போன்ற வீரர் தங்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று எந்த அணியும் விரும்பும். களத்தில் கடும் போட்டி அளிக்கக்கூடியவர். அவர் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். எங்களுக்கு எதிராக ஆடுவதை சவாலாக எடுத்துக் கொள்வதுடன், கோபமூட்டுவதையும் விரும்புவார். ஏனெனில் இதன் மூலம் அவர் களத்தில் சிறப்பாக செயல்படுகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொடரின் போது அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை மறக்க முடியாது. அவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
2. களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது
3. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.
4. சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போது கோலி அசத்தலாக செயல்படுகிறார் - ராகுல் டிராவிட்
சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போதும் கடந்த 20 நாட்களாக கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
5. டி20 கேப்டன் பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய விராட் கோலியை வலியுறுத்தினோம்: தேர்வு குழு தலைவர்
இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கோலியிடம் யாரும் சொல்லவில்லை.